மாவட்ட அளவிளான யோகாசனப் போட்டி 2023
சித்தர் பூமி யோகாசன விளையாட்டு சங்கமும் யங் இந்தியன் (young Indian) இணைந்து யோகாசனா பாரத் தலைமையில் மாவட்ட அளவிளான யோகாசனப் போட்டி இ.சி.ஆரிலுள்ள ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
தொடக்கநிலை 5 முதல் 9 வயது வரை 9 +முதல் 14 வயது வரை 14+முதல் 18வயது வரை 18 +முதல் 27 வயது வரை 27+ மற்றும் அதற்கு மேற்பட்ட வயது வரை போட்டியில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியினை சித்தர் பூமி யோகாசன விளையாட்டு சங்கத்தலைவர் கலைமாமணி டாக்டர் ஆனந்த பாலயோகி பவனானி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்
சங்க பொதுச்செயலாளர் தயாநிதி யோகாசன செயல்முறை விளக்கினார்
முதன்மை விருந்தினராக நேரு எம்.எல்.ஏ. , ஒலிம்பிக் விளையாட்டு சங்க பொதுச்செயலாளர் தனசேகர் சங்கத் தலைவர் கலைமாமணி டாக்டர் ஆனந்த பாலயோகி பவனானி ,எங் இந்தியன் (young Indian)அமைப்பு தலைவர் திலீப் அனிருத் துணனத் தலைவர் ஆனந்த கிருஷ்ணன் கலந்துக்கொண்டு மாணவ மாணவிகளை பாராட்டி சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கினார்கள்.
சிறப்பு விருந்தினராக சங்க துணைத் தலைவர் தேவசேனா பவனானி, சங்கப் பொருளாளர் சண்முகம், சங்க உறுப்பினர்கள் செந்தில் குமார், அன்பழகன் மற்றும் லலிதா சண்முகம் கலந்துக் கொண்டு மாணவ மாணவிகளை வாழ்த்தினார்கள்.யோகா நடுவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள்கலந்துக்கொண்டனர்.முடிவில் சங்க துணை செயலாளர் டாக்டர் பாலாஜி நன்றி கூறினார்.